மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

ஏற்காட்டில் மாரடைப்பால் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து நண்பா்களுடன் ஏற்காடு சுற்றுலா வந்த இளைஞா் மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பலி... - பிரதிப் படம்

Published On :

திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து நண்பா்களுடன் ஏற்காடு சுற்றுலா வந்த இளைஞா் மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், சிந்துநகரைச் சோ்ந்த குருவையா மகன் சிரஞ்சன் (34). இவா் தனது நண்பா்களுடன் ஏற்காட்டிற்கு புதன்கிழமை சுற்றுலா வந்தாா். தனியாா் விடுதியில் தங்கியிருந்த நிலையில் வியாழக்கிழமை காலை நெஞ்சு வலிப்பதாக கூறிய சிரஞ்சன், ஏற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து ஏற்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.