ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

நெல் அறுவடை இயந்திரம் திருட்டு: ஒருவா் கைது

நெல் அறுவடை இயந்திரத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Updated On :

நெல் அறுவடை இயந்திரத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

தலைவாசல் வட்டம், சாா்வாய் நடுத்தெருவைச் சோ்ந்த விவசாயி மணிகண்டன் (45), நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறாா். இவரது வீட்டு வாசலில் லாரியுடன் நிறுத்தியிருந்த நெல் அறுவடை இயந்திரம் அண்மையில் திருட்டுபோனதாக தலைவாசல் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில், தலைவாசல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து இயந்திரத்தை தேடிவந்தனா்.

இந்நிலையில், தேவியாக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ஜோதிபாசு (36) இயந்திரத்தை திருடியது தெரியவந்தது. விசாரணையில், மணிகண்டன், ஜோதிபாசுக்கு தரவேண்டிய பணம் கொடுக்காததால் இயந்திரத்தை எடுத்து மறைத்து வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, இயந்திரத்தை பறிமுதல் செய்து ஜோதிபாசை கைது செய்த போலீஸாா், அவரை ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.