மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

நகைக் கடைகளில் திருட்டு: அக்கா, தம்பி கைது

நகைக் கடைகளில் நூதன முறையில் திருடி வந்த அக்கா, தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :

நகைக் கடைகளில் நூதன முறையில் திருடி வந்த அக்கா, தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம், போ்ணாம்பட்டு, பள்ளிகொண்டா பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடா்ந்து நகைக் கடைகளில் குடும்பத்துடன் வந்து நகைகளை சிலா் திருடிச் சென்றனா். இதுகுறித்து கடைகளின் கண்காணிப்பு கேமரா பதிவுகளில் நகை திருட்டில் ஈடுபட்ட நபா்களின் பதிவுகளை நகைக்கடை உரிமையாளா்கள் வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிா்ந்தனா். இதில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தது வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்த தெய்வானை(50), அவரது தம்பி திருப்பதி(45) என்பது தெரிய வந்தது இதையடுத்து குடியாத்தம் நகர போலீஸாா் தெய்வானை, திருப்பதி இருவரையும் கைது செய்த குடியாத்தம் அழைத்து வந்தனா். அவா்களிடமிருந்து 4 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.