
கமுதி அருகே மின்சாரம் பாய்ந்து பலியான அக்கா, தம்பி உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
கமுதி அருகே மின்சாரம் பாய்ந்து பலியான அக்கா, தம்பி உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்து..

நிறைமதி, பாலபீரவின்.
கமுதி அருகே மின்சாரம் பாய்ந்து பலியான அக்கா, தம்பி உடல்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ்–லதா தம்பதியின் குழந்தைகள் நிறைமதி (10), பாலபீரவின்(6). இருவரும் வீட்டின் அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (ஆர்.ஓ. பிளான்ட்) அருகே கம்பியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடந்த செப்டம்பர் 30-ம் தேதி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதையடுத்து இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டன. இதுகுறித்து அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மின்சாரம் பாய்ந்து பலியான குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் வீதம் 6 லட்சம் நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம், அரசு வேலை, அரசு வீடு, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தைகளின் உடல்களை பெற்றுக்கொள்ளாமல் 2 நாட்களாக தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரனை முகாம் அலுவலகத்தில் சந்தித்து மனுவும் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று கமுதி வட்டாட்சியர் அய்யாத்துரை தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. குழந்தைகளின் குடும்பத்தினரின் கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியர் மூலம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையில் சமரச உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து 4-வது நாளான இன்று கமுதி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிறைமதி, பால பிரவீன் ஆகிய இருவரின் உடல்களும் கூராய்வு செய்யப்பட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இரு குழந்தைகள் மின்சாரம் பாய்ந்து பலியான விவகாரத்தில் அச்சங்குளம் ஊராட்சி செயலர் ராசு மற்றும் மின்பாதை ஆய்வாளர் தங்கச்சாமி ஆகிய இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Bodies of the sister and younger brother who died of electrocution near Kamuthi were handed over to relatives after talks.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




