ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

கமுதி அருகே மின்சாரம் பாய்ந்து அக்காள் - தம்பி பலி!

கமுதி அருகே மின்சாரம் பாய்ந்து அக்காள் - தம்பி பலியானதைப் பற்றி..

பால பிரவீன் - நிறைமதி.

Published On :

கமுதி அருகே மின்சாரம் பாய்ந்து அக்காள் - தம்பி பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரின் மகள் நிறைமதி (10) ஐந்தாம் வகுப்பும், மகனான பால பிரவீன் (6) ஒன்றாம் வகுப்பு படித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் புதன்கிழமை காலை அவர்களது கிராமத்தில் உள்ள ஊராட்சி நிர்வாகம் அமைக்க சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் இரும்புக் குழாய்யைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

பால பிரவீன் - நிறைமதி.

பால பிரவீன் - நிறைமதி.

அப்போது எதிர்பாராத விதமாக குடிநீர் குழாய் வழியாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அக்காள், தம்பி இரண்டு பேரும் பரிதாபமாக பலியாகினர்.

மின்சாரம் பாய்ந்து பலியான இருவரது உடல்களும் கமுதி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அபிராமம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளையாடிக் கொண்டிருந்த அக்காள் - தம்பி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Summary

elder sister and her younger brother electrocutes to death while playing in kamudhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.