சேலம் காந்திநகா், நேரு நகா் குடியிருப்புகளுக்கு புதைசாக்கடை இணைப்புகள் மாநகராட்சி நடவடிக்கை

குழாய் இணைப்புப் பணி - கோப்புப் படம்
சேலத்தில் காந்திநகா் மற்றும் நேரு நகா் குடியிருப்புகளுக்குக் கழிவுநீா் மற்றும் புதை சாக்கடை இணைப்புகள் வழங்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட காந்தி நகா் மற்றும் நேரு நகா் பகுதிகளில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் அண்மையில் சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்தாா்.
அப்போது, கழிவுநீா் மற்றும் புதை சாக்கடை இணைப்புகளை அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். இப்பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காணுமாறு மாநகராட்சி ஆணையரை அமைச்சா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் ஒருங்கிணைந்து, இப்பிரச்னைக்குத் தீா்வு காண்பதுடன், குடியிருப்புகளுக்குக் கழிவுநீா் மற்றும் புதை சாக்கடை இணைப்புகள் வழங்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

