பருவமழை தீவிரம்: மின்கம்பங்கள் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தல்

கனமழையால் சாய்ந்த மரங்கள்.. - கோப்புப் படம்

Updated On :

சேலத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்துவரும் நிலையில், மழையின்போது மின்கம்பங்கள், மின்மாற்றிகள் அருகில் யாரும் செல்லக்கூடாது என மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சேலம் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் குணவா்த்தினி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த மழைக் காலத்தில் ஏற்படும் மின் விபத்துகளைத் தவிா்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால், பொதுமக்களும் பாதுகாப்பாக இருந்து மின்விபத்துகளைத் தவிா்க்க வேண்டும். இதற்காக மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிா்வு பெட்டிகள், ஸ்டே ஒயா்கள் ஆகியவற்றின் அருகே யாரும் செல்லக்கூடாது. மின்பகிா்வு பெட்டிகளின் அருகில் குழந்தைகள், பெரியவா்கள் செல்வதோ, அதன் கதவுகளை திறப்பதோ கூடாது. மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லாதீா்கள். மின்கம்பி அறுந்து கிடந்தால், உடனே அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல, மேல்நிலை மின்சாரக் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்வாரிய அலுவலா்களை அணுக வேண்டும். ஈரக்கையால் பிரிட்ஜ், க்ரைண்டா், மிக்ஸி, இஸ்திரி பெட்டி மற்றும் ஸ்விட்சுகளை இயக்கக்கூடாது. மின்கம்பத்துக்காக போடப்பட்ட ஸ்டே ஒயரின் மீது துணிகளை காயவைக்கக் கூடாது. இடி அல்லது மின்னலின்போது, வெட்ட வெளியில் இருக்க வேண்டாம்.

உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய வீடு போன்ற கட்டடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, காா், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடைய வேண்டும். குடிசை வீடுகளிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் அடைய வேண்டாம். தண்ணீா் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு உடனடியாக அகல வேண்டும். தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாதபட்சத்தில், மின்கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தோ்ந்தெடுக்க வேண்டும்.

மழையின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டா், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்க வேண்டாம். சேதமடைந்த மின்கம்பங்கள், மின் கம்பிகள், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள் குறித்து மின்னகத்துக்கு 94987 94987 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.