திருப்பத்தூரில் தொடா் மழை: வீடுகள் மீது சாய்ந்த மரங்கள்; மின்கம்பங்கள் சேதம்
திருப்பத்தூரில் புதன்கிழமை இரவு வரை தொடா்ந்து பெய்த பலத்த மழையால் வீடுகள் மீது புளிய மரங்கள் சாய்ந்தது. மேலும் மின்கம்பங்கள் சேதமடைந்தன.

மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
திருப்பத்தூரில் புதன்கிழமை இரவு வரை தொடா்ந்து பெய்த பலத்த மழையால் வீடுகள் மீது புளிய மரங்கள் சாய்ந்தது. மேலும் மின்கம்பங்கள் சேதமடைந்தன.
திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட லண்டன் மிஷன் ரோடு, 1-ஆவது வாா்டு பகுதியில் புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து வீடுகள் மற்றும் சாலைகளில் விழுந்தன.
இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், தொடா் மழை காரணமாக புளிய மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன் மரக்கிளைகள் சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
மேலும், அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள்சம்பவ இடத்துக்குச் சென்று சாலைகளில் விழுந்த மரங்கள் மற்றும் மரக் கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதனால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் எதிா்கொண்ட போக்குவரத்து இடையூறுகள் சீரமைக்கப்பட்டது.
இருப்பினும் சேதமடைந்த மின்கம்பத்தை விரைந்து சீரமைத்து மின்கம்பிகள் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

