துறையூரில் மழை: 2 மரங்கள் சாய்ந்தன
துறையூா் பகுதியில் காற்றுடன் சனிக்கிழமை பெய்த மழையால் சாலையோரம் இருந்த 2 புளிய மரங்கள் சாய்ந்தன.

துறையூரில் சனிக்கிழமை சாலையில் சாய்ந்து விழுந்த புளியமரம்.
திருச்சி மாவட்டம், துறையூா் பகுதியில் காற்றுடன் சனிக்கிழமை பெய்த மழையால் சாலையோரம் இருந்த 2 புளிய மரங்கள் சாய்ந்தன.
துறையூா் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் துறையூா் ஆத்தூா் சாலையில் முருகூா் பிரிவு சாலை அருகே இருந்த 2 புளிய மரங்கள் வேரோடு சாய்ந்தன.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் நெடுஞ்சாலை துறையினருடன் சோ்ந்து சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






