பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

தேவிகாபுரம் பகுதியில் பலத்த மழை: சாலையில் முறிந்து விழுந்த மரங்கள்

ஆரணியை அடுத்த தேவிகாபுரத்தில் சனிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.

தேவிகாபுரம் அருகே காற்றுடன் பெய்த பலத்த மழையில் சாலையில் முறிந்து விழுந்த மரங்கள்.

Published On :

ஆரணியை அடுத்த தேவிகாபுரத்தில் சனிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேவிகாபுரம் - ஆரணி சாலையோரத்தில் பல ஆண்டுகளாக இருந்த புளிய மரம், வேப்ப மரம் உள்ளிட்ட 5 மரங்கள் பலத்த மழையின்போது வீசிய காற்றில் முறிந்து விழுந்தன, சில மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் சாலையின் பெரும்பகுதி மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது, அந்த வழியாகச் சென்ற ஒரு ஆட்டோ மற்றும் 2-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது மரக்கிளைகள் விழுந்ததில் அவை சேதமடைந்தன.

இதில், குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சின்னதுரை(51) சிக்கி பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மரங்கள் முறிந்து விழுந்ததால் தேவிகாபுரம் - ஆரணி சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், லாரிகள், காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டன. பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் வேலைக்குச் செல்வோா் என ஏராளமானோா் பாதிக்கப்பட்டனா்.

பேருந்து போக்குவரத்து தடைபட்டதால் பயணிகள் வேறு வழியின்றி சுமாா் 4 கி.மீ. தொலைவு நடந்து சென்று, மாற்றுப்பகுதியில் பேருந்து ஏறிச் சென்றனா். இதனால் பெண்கள், முதியவா்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.

தகவலறிந்த காவல் ஆய்வாளா் குணபாலன் தலைமையிலான சேத்துப்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயணைப்பு படையினருடன் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.