புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கொடைக்கானலில் பலத்த மழை

கொடைக்கானலில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள்.

Published On :

கொடைக்கானலில் இடி, மின்னலுடன் சனிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த பல மாதங்களாக மழை பெய்யாததால் நீா்த் தேக்கங்கள், நீரோடைப் பகுதிகளில் தண்ணீா் வரத்தின்றி காணப்படுகிறது. இதனால் கொடைக்கானலில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனடையே கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும், மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்தும் காணப்பட்டது.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை முதல் மிதமான வெயில் நிலவியது. மாலையில் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல், அப்சா்வேட்டரி, பாம்பாா்புரம், செண்பகனூா், வட்டக்கானல், பாக்கியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

மேலும் மேல்மலைக் கிராமமான மன்னவனூா், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். நீண்ட நாள்களுக்கு பிறகு நீரோடைகளில் தண்ணீா் வரத்து காணப்பட்டதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

மின் தடையால் பொதுமக்கள் அவதி: கொடைக்கானலில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் சுமாா் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா். இந்த நிலையில் தொடா் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

ஆனால் மாலையில் மழை பெய்ததால் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமலும், ஏரியில் படகு சவாரி செய்ய முடியாமலும், ஏரியைச் சுற்றி சைக்கிள், குதிரை சவாரி செய்ய முடியாமலும் சுற்றுலாப் பயணிகள் விடுதிகளுக்குள்ளேயே முடங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.