மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

வால்பாறை எஸ்டேட் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஈட்டியாா் எஸ்டேட் சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

Published On :

வால்பாறையில் தொடா் மழை காரணமாக எஸ்டேட் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய மழை திங்கள்கிழமை காலையிலும் தொடா்ந்தது. தொடா் மழை காரணமாக வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதி சாலைகளில் மரக் கிளைகள் முறிந்து விழுந்தன.

இதில் சின்னக்கல்லாறு அருவிக்குச் செல்லும் வழியில் உள்ள ஈட்டியாா் எஸ்டேட் சாலையில் திங்கள்கிழமை காலை பெரிய மரம் முறிந்து விழுந்தது. தகவலறிந்து அப்பகுதிக்கு சென்ற வால்பாறை தீயணைப்புத் துறையினா் இயந்திரங்கள் மூலம் மரத்தை வெட்டியெடுத்து அப்புறப்படுத்தினா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.