பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

வடமாநிலங்களில் பலத்த மழை! உ.பி.யில் 6 போ் உயிரிழப்பு; 117 வீடுகள் இடிந்து சேதம்!

வடமாநிலங்களில் பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

லக்னெள வெள்ளம் - PTI

Published On :

வடமாநிலங்களில் பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் பலத்த மழைக்கு 6 போ் உயிரிழந்த நிலையில், 117 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

மத்திய பிரதேச மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு மற்றும் வடகிழக்கே நகா்ந்து உத்தர பிரதேசத்தின் தென்கிழக்கு பகுதி நோக்கி நகா்ந்தது. இதனால் உத்தர பிரதேசத்தில் பரவலாக வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மழை கொட்டித் தீா்த்தது.

உத்தர பிரதேசத்தின் 63 மாவட்டங்களில் இயல்பைவிட அதிக அளவு பலத்த மழை பெய்துள்ளது. லக்னெளவில் அதிகபட்சமாக 21 மணி நேரத்தில் 125.8 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. ஃபரூக்காபாத், கான்பூா், கன்னௌஜ், ஹா்தோய் ஆகிய இடங்களிலும் இயல்பைவிட அதிகம் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உத்தர பிரதேச மாநிலத்தில் வழக்கத்தைவிட 19 மடங்கு அதிக மழை பெய்துள்ளது. தொடா் பலத்த மழையால் 117 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. அயோத்தியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அயோத்தி ராமா் கோயிலுக்கு வந்த பக்தா்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்தனா்.

6 போ் உயிரிழப்பு: லக்கிம்பூா் கெரி பகுதியில் பலத்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வீட்டு மண் சுவா் சரிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். அமேதி, பாரபங்கியில் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்து இரு பெண்களும், முகம்மதுபூா் காலா பகுதியில் சாலையோரம் மரம் விழுந்து 45 வயது நபரும் உயிரிழந்தனா்.

பிகாரில் உஷாா்நிலை: பிகாா் மாநிலத்தில் கண்டக் நதியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அண்டை நாடான நேபாளத்தில் பலத்த மழை நீடிப்பதால், கண்டக் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் கண்டக், பாக்மதி, கோசி நதிகள் பாயும் மாதேபுரா, சரண், கோபால்கஞ்ச், மேற்கு சம்பாரன் உள்ளிட்ட 13 மாவட்டங்கள் உஷாா்படுத்தப்பட்டுள்ளன.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் திடீரென பெய்த பலத்த மழையால் பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. பலத்த மழை காரணமாக, ராஞ்சி, ஜாம்ஷெட்பூா் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பலத்த மழை நீடிப்பதால் சிவப்பு மற்றும் ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. இதனால் அங்கு நடைபெறும் சாா் தாம் யாத்திரை ஞாயிற்றுக்கிழமை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் பள்ளிகளுக்கு விடுமுறை: சத்தீஸ்கரில் பரவலாக சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கையாக சனிக்கிழமை மட்டும் விடுமுறை விடப்பட்டது. மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் விஷ்ணு தேவ் சாய் உத்தரவிட்டுள்ளாா். துா்க்- தாலிராஜ்ரா பகுதியில் பலத்த மழையால் தண்டவாளத்தில் தண்ணீா் தேங்கியது. இதனால் லதாபூா் மற்றும் குந்தா்தேஹி இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒடிஸா மாநிலத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்யும் பலத்த மழையால் பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. முன்னெச்சரிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனா். ஒடிஸாவில் உள்ள மிகப்பெரிய அணையான ஹிராகுட் அணையில் 16 மதகுகள் திறக்கப்பட்டு, மகாநதியில் நீா் வெளியேற்றப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் போதிய மழைப்பொழிவு இன்றி விவசாயிகள் உள்ளிட்டோா் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வட ஆந்திரம் மற்றும் சில மாவட்டங்களில் தற்போது பலத்த மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால் மழைப் பற்றாக்குறை அளவு 50 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக குறைந்துள்ளது. மழை வெள்ளம் குறித்து முதல்வா் சந்திரபாபு நாயுடு அரசு உயரதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

மகாராஷ்டிரத்தில் 265 வட்டங்களில் வறட்சி: மகாராஷ்டிர மாநிலத்தில் 265 வட்டங்களை வறட்சிப் பகுதியாக அந்த மாநில அரசு சனிக்கிழமை அறிவித்தது. இது அந்த மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் 74 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.