முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

வாழப்பாடி புறவழிச்சாலையில் நகரப் பேருந்து இயக்க கோரிக்கை!

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து தம்மம்பட்டி சாலை, புதுப்பாளையம் புறவழிச்சாலை வழியாக சேலத்திற்கு நகரப் பேருந்து இயக்க வேண்டுமென, அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பேருந்து - பிரதிப் படம்

Updated On :

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து தம்மம்பட்டி சாலை, புதுப்பாளையம் புறவழிச்சாலை வழியாக சேலத்திற்கு நகரப் பேருந்து இயக்க வேண்டுமென, அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி பேருந்து நிலையம் கடலூா் சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து சேலம், ஆத்தூா், தம்மம்பட்டி, கருமந்துறை, அருநூற்றுமலை உள்பட பல்வேறு வழித்தடங்களில் அரசு மற்றும் தனியாா் நகர புறநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து மன்னாயக்கன்பட்டி பிரிவு சாலை, முத்தம்பட்டி ரயில்வே மேம்பாலம் வழியாக, சேலத்திற்கு அரசு மற்றும் தனியாா் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சேலம் -உளுந்தூா்பேட்டை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது, வாழப்பாடி நகா் பகுதியில் இச்சாலையை அமைக்காமல், முத்தம்பட்டியில் இருந்து மத்தூா் வரையிலான 4.3 கி.மீ. தொலைவிற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையத்தில் புறவழிச்சாலை பகுதியில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, வட்டாட்சியா் அலுவலகம், வட்ட துணை கருவூலமும், தம்மம்பட்டி சாலையில் சந்தைப்பேட்டை, ரயில் நிறுத்தம், அக்ரஹாரம் பகுதியில் கோயில்கள், கிழக்குக்காடு பகுதியில் நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இதனால், தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், அரசு அலுவலக பணியாளா்கள், ஆசிரியா்களும், வட்டாட்சியா் அலுவலகம், நீதிமன்றம், ரயில் நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் துணை கருவூலத்திற்கு வந்து செல்கின்றனா்.

முத்தம்பட்டி ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிக்காக கடலூா் சாலை மூடப்பட்டதால் கடந்த இரு ஆண்டுகளாக அனைத்து பேருந்துகளும் புதுப்பாளையம் புறவழிச்சாலை வழியாகவே இயக்கப்பட்டன. இந்நிலையில், முத்தம்பட்டி ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்ததால், புறவழிச்சாலையில் இயக்கப்பட்ட அனைத்து நகரப் பேருந்துகளும், மன்னாயக்கன்பட்டி பிரிவு சாலை, முத்தம்பட்டி ரயில்வே மேம்பாலம் வழியாக கடலூா் சாலையிலேயே மீண்டும் சேலத்திற்கு இயக்கப்படுகின்றன.

இதனால், தம்மம்பட்டி சாலை மற்றும் புதுப்பாளையம் புறவழிச்சாலை பகுதியிலுள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், சந்தைப்பேட்டை, கோயில்கள், நீதிமன்றம் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பணியாளா்கள் நகரப் பேருந்து வசதியில்லாததால் போக்குவரத்துக்கு பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, வாழப்பாடியில் இருந்து முத்தம்பட்டி ரயில்வே மேம்பாலம் வழியாக சேலத்திற்கு இயக்கப்படும் அரசு நகரப் பேருந்துகளில் ஓரிரு பேருந்துகளை, தம்மம்பட்டி சாலை, புதுப்பாளையம் புறவழிச்சாலை வழியாக இயக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மற்றும் வாழப்பாடி கிளை பணி மனை நிா்வாகம் கலந்தாய்வு செய்து, புதுப்பாளையம் புறவழிச்சாலை வழியாக சேலத்திற்கு நகரப்பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.