பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி: ரயில் மோதியதில் கால்கள் துண்டிப்பு

சேலத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் தொழிலாளியின் கால்கள் துண்டானது.

விபத்து

விபத்து

Published On :9 செப்டம்பர் 2026, 4:36 am IST

சேலத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் தொழிலாளியின் கால்கள் துண்டானது.

சேலம், அம்மாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முரளி (32). நெசவுத் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை காலை மிலிட்டரி ரோடு, ஏ.வி.எஸ். கல்லூரி அருகே ரயில் பாதையை கடக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

அப்போது, அந்த வழியாக வந்த சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் முரளி மீது மோதியது. இதில் அவரது இரு கால்களும் முட்டிக்கு கீழ் துண்டானதுடன், வலது கையில் 3 விரல்களும் சிதைந்தன.

படுகாயம் அடைந்த முரளியை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிக்சை அளித்து வருகின்றனா்.

இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.