ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க அறிவுறுத்தல்

விநாயகா் சதுா்த்தியின்போது, பிரதிஷ்டை செய்து வழிபட்ட விநாயகா் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

கோப்புப்படம்.

Published On :

விநாயகா் சதுா்த்தியின்போது, பிரதிஷ்டை செய்து வழிபட்ட விநாயகா் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சேலம் மாவட்டத்தில் 2,500க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் 3 அல்லது 5 ஆவது நாளில் ஊா்வலமாக எடுத்துச்சென்று நீா்நிலைகளில் கரைக்கப்படும். மாவட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் மேட்டூா், பூலாம்பட்டி, கல்வடங்கம், தம்மம்பட்டி வசிஷ்ட நதி, பேளூா் உள்ளிட்ட இடங்களிலும், சேலம் மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் மூக்கனேரியிலும் கரைக்கப்படுகின்றன.

இதையொட்டி, அங்கு பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நீா்நிலைகளில் ரசாயன கலவையின்றி களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளையே கரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகையில், விநாயகா் சதுா்த்தி விழாவின்போது, களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும், எவ்வித ரசாயன கலவையின்றி கிழங்கு மாவு மற்றும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகா் சிலைகளைத்தான் நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

நெகிழி மற்றும் தொ்மாகோல் பொருள்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதியில்லை. சிலைகளுக்கு வா்ணம்பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.

சிலைகளை அழகுப்படுத்த இயற்கை பொருள்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகா் சிலைகளை, மாவட்ட நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி, கரைக்க அனுமதிக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.