விருதுநகர், டிச.29: மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு சாதாரண பயணிகள் ரயில் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என சீசன் பயணச்சீட்டு பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்து ள்ளது.
இது குறித்து இத்தொகுதி உறுப்பினர் மாணிக்க தாகூருக்கு சங்கத்தினர் அனுப்பியுள்ள மனு விவரம்:
மதுரை மாதாந்திர பயணிகள் நலச் சங்கம் கடந்த 4 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். 1994-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரையில் மதுரை- தூத்துககுடி பயணிகள் ரயில் (மீனாட்சி) இயங்கிய போது, குறைந்த கடடணத்தில் மக்கள் பயணம் செய்ய வசதியாக இருந்தது. 2000-ம் ஆண்டு பெங்களூர்-மதுரை வரை விரைவு ரயில் போக்குவரத்து இருந்து.
பின்னர் இந்த ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டு, தற்போது வரையில் அந்த ரயில் போóகுவரத்து நடைபெறுகிறது. ஆனால் மாதாந்திர பயணச்சீட்டு பயணிகள் தவிர, பிற தரப்பினர் ரயில் போக்குவரத்துக்கு வசதியின்றித் தவிக்கின்றனர்.
இந்த ரயிலில் மாதாந்திர பயணச்சீட்டு இல்லாதோர், மதுரை புறநகர் பகுதியிலிருந்து அதிகாலையில் ரயில் நிலையத்துக்கு விரைவாக வந்து, மதுரையில் காலை 7.25-க்கு தூத்துக்குடி செல்லும் ரயிலைப் பிடிப்பதற்கு படாத பாடு பட வேண்டியுள்ளது. இந்த ரயிலை விட்டால், தென் மாவட்டங்களுக்குச் செல்ல பிற்பகல் 2.40 மணி வரையில் வேறு ரயில் கிடையாது.
தற்போது திண்டுóக்கல்-போடிநாயக்கனூர்- செங்கோட்டை ஆகிய வழித்தடங்களில் சீசன் டிக்கெட் பயணிகள் பயனடையும் விதத்தில் ரயில் போக்குவரத்து உள்ளது. ஆனால் திண்டுகல்லில் இருந்து காலையில் மதுரை வரும் ரயில் மாலை வரையில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக இந்த ரயிலை திருச்செந்தூர் வரை இயக்கினால், பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.
மேலும் விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து, நகரப் பஸ் நிலையத்துக்கு காலையில் இரண்டு பஸ்கள், மாலையில் ஒரு பஸ் போக்குவரத்து உள்ளது. இது போதுமானதாக இல்லை. ஆகவே விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து கூடுதல் பஸ்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.