அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிசுக்களுக்கு கேட்கும் திறன் சோதனை சிகிச்சை

மதுரை, ஆக. 24: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறந்து 2 நாள்கள் ஆன நிலையில் சிசுக்களுக்கு, கேட்கும்திறன் சோதனை சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில், இதுபோன்ற நவீன சிகிச்சை அளிக்கப்படுவது
Updated on
2 min read

மதுரை, ஆக. 24: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறந்து 2 நாள்கள் ஆன நிலையில் சிசுக்களுக்கு, கேட்கும்திறன் சோதனை சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில், இதுபோன்ற நவீன சிகிச்சை அளிக்கப்படுவது சிறப்பம்சம் என மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காது, மூக்குத் தொண்டை சிகிச்சைப் பிரிவுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.

 இதில் பெரும்பாலானோர் காது இரைச்சல், தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை பெறுகின்றனர். காதுப் பிரச்னைக்காக மட்டும், மாதத்திற்கு குறைந்தது 150 பேர் வருவதும் தெரியவந்துள்ளது.

 இதுவரை குழந்தைகளுக்கு கேட்கும்திறன், பேச்சுத் திறன் குறித்த சிகிச்சை அவர்கள் நன்றாக பேச ஆரம்பித்த நிலையில்தான் அளிக்கமுடிந்தது. அதாவது 5 வயதுவரை குழந்தைகளுக்கு பேச்சுத் திறன், கேட்கும் திறன் உள்ளதா எனக் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது. அதன்பிறகே சிகிச்சைக்கு பெற்றோர் குழந்தைகளை அழைத்து வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

 இத்தகைய நிலையில்தான் பிறந்து, இரண்டே நாள்கள் ஆன நிலையில் சிசுக்களுக்கு பேச்சுத்திறன், கேட்கும்திறன் குறித்த பரிசோதனை மேற்கொள்ள மதுரை அரசு மருத்துவமனையில் ஓரிரு மாதங்களுக்கு முன் நவீன சாதனமான ஆட்டோ அக்கவுஸ்டிக் எமிஷன்ஸ் (ர்ற்ர் அஸ்ரீர்ன்ள்ற்ண்ஸ்ரீ உம்ண்ள்ள்ண்ர்ய்ள்) என்ற மருத்துவச் சாதனம் அமைக்கப்பட்டது.

 இச்சாதனம் மூலம் மாதத்துக்கு 30 குழந்தைகள் வீதம், இதுவரை சுமார் 120 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 இவ்வாறு சிறுவயதில் பேச்சுத்திறன்,கேட்கும் திறன் குறித்த சோதனை மேற்கொள்வதால், குழந்தைக்கு எத்தகைய பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப சிகிச்சையை ஆரம்பத்திலேயே அளிக்கலாம். அவ்வாறு சிகிச்சையை  மேற்கொள்வதால் காது, தொண்டைக் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே நீக்கி குழந்தையை பேச்சு,கேட்கும் திறன் குறைபாடு இல்லாத நிலையில் வளரவைக்கவும் முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

  ஆனால், பிறந்ததும் குழந்தைகளுக்கு கேட்கும் திறன், பேச்சுத்திறன் சோதனையை மேற்கொள்ளவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 குழந்தைக்கு குறைபாடு இருக்கலாம் என பிரசவ சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள்  சந்தேகித்தால் மட்டுமே அந்தக் குறிப்பிட்ட குழந்தைகள் மட்டும் சோதனைக்கு  உள்படுத்தப்படுவதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர். மருத்துவமனையில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும் கேட்கும் திறன் சோதனைக்கு உள்படுத்தவேண்டும் என்பதும் மருத்துவர்களின் கோரிக்கையாகும்.

 சிசுக்களுக்கு கேட்கும் திறன் சோதனை மேற்கொள்ளப்படுவதை அடுத்து மருத்துவமனையின் காது, மூக்குத் தொண்டைப் பிரிவில் நீண்டநாள்களாக காலியாக இருந்த கேட்கும் திறன் பரிசோதகர் பணியிடம் அண்மையில் நிரப்பப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 மேலும், பாக்டீரியல், வைரஸ் ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து பெண்களுக்கு காதுக்குள் இருக்கும் சிறு எலும்புகள் தேய்மான நோய் பாதிப்பு அதிகம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

 இதுபோன்ற காது பாதிப்பு பிரச்னைக்கு எண்டாஸ்கோபிக் சிகிச்சையும் அரசு மருத்துவமனையில் தற்போது அளிக்கப்படுகிறது என்கிறார் காது, மூக்குத் தொண்டை அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் பேராசிரியர் கண்ணப்பன்.

  முன்பெல்லாம் காதுகளில் அறுவைச் சிகிச்சை அளிப்பதற்கு காதின் வெளிப்புறத்தில் கீறி அதன்மூலம் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டிருந்தனர். இதுபோன்ற அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவர் குறைந்தது ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது எண்டாஸ்கோபிக் முறையால் 3 நாள்களிலேயே நோயாளிகள் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

 குளிர்சாதன வசதி

மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை அறுவைச் சிகிச்சை அறையில், நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 3 குளிர்சாதன வசதி சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை  மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மருத்துவர் எஸ்.எம். சிவகுமார் புதன்கிழமை தொடக்கிவைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com