மதுரை, மார்ச் 1: மாநில அளவில் முதன்முறையாக மதுரையில் போக்குவரத்துப் போலீஸôருக்கு குளிர்சாதன வசதியுடன் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் முடிந்த நிலையில் ஓரிரு வாரத்தில் தெற்குவெளிவீதிப் பகுதியில் முதல் குளிர்சாதன வசதியுள்ள நிழற்குடை திறக்கப்பட உள்ளது.
மதுரை நகரில் போக்குவரத்தைச் சீர்படுத்த தனிப்பிரிவு உள்ளது. இதில் துணை கமிஷனர், உதவி கமிஷனர், ஆய்வாளர்கள் மற்றும் போலீஸôர் என 300 பேர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 1965-ம் ஆண்டு முதலே மதுரையில் போக்குவரத்துப் போலீஸôரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. எனினும் அவ்வப்போது மேற்கொள்ளும் நடவடிக்கையால் வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்படுகிறது.
பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், காளவாசல், பழங்காநத்தம் உள்ளிட்ட இடங்களில் பெரிய போக்குவரத்து சந்திப்பு உள்ளன. நகரில் மொத்தம் 20}க்கும் மேற்பட்ட இடங்களிலேயே போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன.
அதேபோல போக்குவரத்துப் போலீஸôர் நின்று போக்குவரத்தை சீர்படுத்தும் வகையில் 110 இடங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல இடங்களில் போலீஸôர் கைகளைக் காட்டி போக்கு ரத்தை சீர்படுத்தும் நிலை உள்ளது.
பெரும்பாலான இடங்களில் நிழற்குடைகள் சேதமடைந்துள்ளன. இதுபோன்ற இடங்களில் போலீஸôர் கடும் வெயிலில் நின்றே போக்குவரத்தை சீர்செய்ய வேண்டி உள்ளது.
இதுபோல 24 இடங்களில் போலீஸôர் சாலைச் சந்திப்புகளில் இருந்து போக்குவரத்தை சீர்படுத்தி வருகின்றனர். இப்பணியில் மட்டும் 2 ஷிப்டுகளாக 48 போலீஸôர் ஈடுபடுகின்றனர்.
நிழற்குடை உள்ள இடத்திலும் போதிய காற்றோட்ட வசதி இல்லாததால் பல நேரங்களில் போக்குவரத்துப் போலீஸôர் கடும் வெயிலால் அவதிப்பட நேரிடுகிறது.
தொடர்ந்து வெப்பத்தில் இருந்தே போக்குவரத்துப் போலீஸôர் பணிபுரிவதால் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் உடல் நலம் பாதிக்கும் போக்குவரத்துப் போலீஸôரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்காகப் போக்குவரத்துப் போலீஸôருக்கு என கூலிங்கிளாஸ் கண்ணாடி, சிறப்பு வசதியுள்ள தொப்பி, உடை ஆண்டுதோறும் வாங்கவேண்டியுள்ளது. இதுபோன்ற செலவுகள் கூடுதல் நிதிச் சுமையாகவும் அமைகிறது.
இதைக் கருத்தில்கொண்டு நகரில் குறிப்பிட்ட இடங்களில் போக்குவரத்து நிழற்குடைகளை குளிர்சாதன வசதியுடன் அமைக்க மாநகர் போலீஸôர் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி தனியார் நிறுவனத்துடன் இணைந்து 5 இடங்களில் குளிர்சாதன நிழற்குடை அமைக்கப்பட உள்ளதாகவும், ஒவ்வொரு நிழற்குடையும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை மதிப்பில் அமைக்கப்படும் எனவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை நகரில் போக்குவரத்தை சீர்படுத்த போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் முன்னுரிமை அளித்து வருகிறார். அதன்படி சாலைகளில் கண்காணிப்புக் காமிரா அமைப்பது உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.