பளியர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?

போடி, நவ. 14:÷போடி அருகே வனப்பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி பளியர் இனத்தைச் சேர்ந்த 45 குடும்பத்தினர் குடிசைகளில் வசித்து வருகின்றனர். ÷போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கனி, முதுவாக்குடி, ஊத்த

போடி, நவ. 14:÷போடி அருகே வனப்பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி பளியர் இனத்தைச் சேர்ந்த 45 குடும்பத்தினர் குடிசைகளில் வசித்து வருகின்றனர்.

÷போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கனி, முதுவாக்குடி, ஊத்தாம்பாறை, சோலையூர், சிறைக்காட்டு பரவு, பெரியாற்றுக் கோம்பை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் பளியர் இனத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

÷முந்தைய காலங்களில் விவசாயிகளின் தோட்டங்களில் வேலை செய்து, அவர்கள்  தரும் உணவை மட்டும் பெற்றுக்கொண்டு, மரங்களின் நிழலிலும், பாறை இடுக்குகளிலும் பளியர் இன மக்கள் வசித்து வந்தனர்.

÷இவர்களுக்கென மத்திய மாநில அரசுகள் வனத்துறை மூலம் சிறப்பு திட்டங்களைக் கொண்டு வந்தன. போடி பகுதியில் முதுவாக்குடி, சோலையூர், கொட்டகுடி ஆகிய இடங்களில் பழங்குடியின மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன.

÷ஆனால் சிறைகாட்டுப் பரவு, பெரியாற்றுக் கோம்பை பகுதியைச் சேர்ந்த பளியர் இனக் குடும்பங்ளுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள 45 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேர் சிரமப்படுகின்றனர்.

÷இவர்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் சிறைக்காட்டு பரவில் 2 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது.

÷ஆனால் ஓராண்டாகியும் இந்த நிலத்திற்கு இதுவரை முறையாகப் பட்டா வழங்கவில்லை. இதனால் பளியர் இன மக்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த 2 ஏக்கர் நிலத்தில் திறந்த வெளியில் வசிக்கின்றனர். இவர்கள் குடிசை அமைத்துக் கொள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் உதவியுள்ளனர்.

÷இப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. மேலும் எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

÷இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தேனி மாவட்ட செயலாளர் சுருளிநாதன், மாநில குழு உறுப்பினர் பாக்கியலட்சுமி, தாலுகா நிர்வாகிகள் செல்வராஜ், தனலட்சுமி உள்ளிட்ட குழுவினர் பளியர் இன மக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பளியர் இன மக்களுக்காகப் போராட்டம் நடத்த உள்ளதாக அவர்களிடம் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com