தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

காலி பணியிடங்களை நிரப்ப சித்த மருத்துவ பட்டதாரிகள் வலியுறுத்தல்

மதுரை, அக்.13: தமிழகத்தில் சித்த மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும் என, தமிழ்நாடு சித்த மருத்துவப் பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.    இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் த

Updated On :20 செப்டம்பர் 2012, 9:57 pm IST

மதுரை, அக்.13: தமிழகத்தில் சித்த மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும் என, தமிழ்நாடு சித்த மருத்துவப் பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

   இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.ஆர். குமார், செயலர் ஜே.ராஜசேகரன், நிர்வாகி ஆர்.சாந்தி ஆகியோர் தெரிவித்துள்ளது:

    தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கும் நிலையில், முழுவதும் தமிழ் பாடங்கள் மூலம் மருத்துவம் படித்து மருத்துவர்களாகிய சித்த மருத்துவர்கள் பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர்.

    கடந்த பட்ஜெட்டின்போது அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருத்துவப் பிரிவு தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தும், இதுவரை செயல்படுத்தப்படவில்லை. அனைத்துத் துறைகளிலும் பணி மூப்பு அடிப்படையில் அரசுப் பணியாணை வழங்கப்பட்டுவரும் இக்காலகட்டத்தில், கடந்த 22 ஆண்டுகளாக பணி மூப்பின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படாத துறையாக சித்த மருத்துவத் துறை உள்ளது.

    மத்திய அரசின் ஊரக சுகாதாரத் திட்டத்தின்கீழ் 1,450 காலிப் பணியிடங்கள் இருந்தும், 200 பேருக்கு மட்டுமே குறைந்த ஊதியத்தில் அதுவும் தாற்காலிகமாக வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 கடந்த 22 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 4,000 பட்டதாரி மருத்துவர்கள் இருக்கும் இத்துறையில் வெறும் 450 மருத்துவர்களுக்கு மட்டுமே போட்டித் தேர்வு மூலம் பணி கிடைத்துள்ளது.  இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தமிழில் மருத்துவம் படித்த சித்த மருத்துவப் பட்டதாரிகளின் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.