காரைக்குடி நகராட்சி மயானம் மேம்படுத்தப்படுமா?

காரைக்குடி,செப்.29: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கழனிவாசல்-திருச்சி சாலையில் உள்ள நகராட்சி ஆடு வதை செய்யும் இடம் அருகேயுள்ள மயானத்தை மேம்படுத்த   நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எ

காரைக்குடி,செப்.29: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கழனிவாசல்-திருச்சி சாலையில் உள்ள நகராட்சி ஆடு வதை செய்யும் இடம் அருகேயுள்ள மயானத்தை மேம்படுத்த   நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

   காரைக்குடியில் முக்கியப் பகுதிகளான செக்காலை, அண்ணாநகர், சுப்பிரமணியபுரம், ஆறு முகநகர், வைரவபுரம், பர்மாகாலனி, சூடாமணிபுரம் என சுமார் 30 ஆயிரம் மக்கள் வசிக்கும் பகுதிக்காக கழனிவாசல்-திருச்சி சாலையில் நகராட்சி வாரச்சந்தை மற்றும் ஆடுவதை செய்யும் இடம் அருகே மயானம் அமைக்கப்பட்டுள்ளது.

   இங்கு இறுதிச்சடங்கு செய்ய வருவோருக்கு தண்ணீர் இல்லாமல் உள்ளது. மயானத்தின் உள்ளே செல்ல அமைக்கப்பட்ட சாலையின் இரு புறங்களிலும் மலம் கழிக்கப்படுவதால் உண்டாகும் துர்நாற்றம், வியாழக்கிழமை தோறும் நடைபெறும் சந்தையில் ஏற்படும் கழிவுகள் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட பொருள்கள் வீசிச் செல்வதால் அவை அழுகி ஆங்காங்கே வழுக்கி விழும் நிலையும், அங்குள்ள அடி குழாயில் தண்ணீர்வராத நிலையும் என குறைகள் நிறைந்திருக்கிறது.

      அடி குழாயைச் சீரமைத்து தண்ணீருக்கு ஏற்பாடு செய்யவேண்டும். சாலையின் ஓரங்களில் உள்ள அசுத்தங்களையும், கருவைச் செடிகள் பாதையை மறைப்பதையும் அகற்றிடவும், போதிய அளவுக்கு மின்விளக்கு வசதிகளையும் செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  இதுகுறித்து காரைக்குடி நகர்மன்றத் தலைவர் எஸ். முத்துத்துரை கூறியது:

  காரைக்குடி சந்தைப்பேட்டைப் பகுதியில் | 55 லட்சத்தில் மின்மயானம் அமைக்கும் பணி முடிந்துவிட்டது.  தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வண்டிகள் வைத்துப் பராமரித்தும், குறைந்த செலவில் மின்மயானத்துக்கே சடலத்தை எடுத்துச்சென்று எரியூட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

  அதுவரை கழனிவாசல்-திருச்சி சாலையில் உள்ள நகராட்சி மயானத்தில் குறைகளை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

திருப்பாச்சேத்தி ஊராட்சியில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com