பெரியார் பஸ் நிலையம், ஆரப்பாளையத்தில் இருந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பஸ்கள்

மதுரை, ஆக.27: சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக மதுரை பெரியார் பஸ் நிலையம் உள்பட மூன்று பஸ் நிலையங்களில் இருந்து அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு பஸ் வசதி வெள்ளிக்கிழமை முதல்
Updated on
2 min read

மதுரை, ஆக.27: சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக மதுரை பெரியார் பஸ் நிலையம் உள்பட மூன்று பஸ் நிலையங்களில் இருந்து அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு பஸ் வசதி வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட்டுள்ளது.

  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்துசெல்கின்றனர்.

  இவ்வாறு வருவோர், தங்களது வாகனங்களை பெரியார் பஸ் நிலையம் அருகில்  உள்ள காம்ப்ளக்ஸ் பஸ் நிலையம், எல்லீஸ் நகர், பைபாஸ் சாலை, மாட்டுத்தாவணி, சிம்மக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்திவிட்டு பின்னர் அங்கிருந்து நடந்தும், ஆட்டோக்கள், ரிக்ஷா மூலம் கோயிலுக்குச் செல்கின்றனர்.

   இதனால் ஏற்படும் காலவிரயம், பணவிரயம் ஆகியவற்றைத் தவிர்க்கும்  வகையிலும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் நலன் கருதியும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டமானது மதுரை பெரியார் பஸ் நிலையம் , ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பிரதான பஸ் நிலையங்களில் இருந்து மீனாட்சி அம்மன் கோயில் வரை பஸ்களை இயக்குவதற்குத் திட்டமிட்டது.

  இதுகுறித்து, மாநகர் போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையர் ஜெ.ராஜேந்திரன், போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் வெங்கடாசலம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

  இந்நிலையில், இதற்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை மீனாட்சியம்மன் கோயில் அருகே உள்ள ஜான்சிராணி பூங்கா (பஸ் நிறுத்தம்) அருகே நடைபெற்றது.

  "மீனாட்சி அம்மன் கோயில் டூ மீனாட்சி அம்மன் கோயில்' என்று பெயர் பலகை வைக்கப்பட்ட டவுன் பஸ்ûஸ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் வெங்கடாசலம் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துக் கழக அதிகாரி ராகவன் மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஜெ.ராஜேந்திரன், துணை ஆணையர்கள் மகுடபதி, சோமசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  புதிய திட்டத்தின்படி, பெரியார் நிலையத்திலிருந்து புறப்படும் டவுன் பஸ், நேதாஜி சாலை வழியாக ஜான்சிராணி பஸ் நிறுத்தம் வந்து, அங்கிருந்து கான்சாமேட்டுத் தெரு, தெற்குமாசி வீதி, கூடலழகர் பெருமாள் கோவில் வழியாக பெரியார் பஸ் நிலையம் வந்தடையும். இதற்கு ஒரே கட்டணமாக ரூ.3 வசூலிக்கப்படும்.

  மேலும், ஆரப்பாளையத்திலிருந்து செல்லும் 4-ம் எண்ணுடைய விரகனூர் சுற்றுச்சாலை பஸ்ஸýம் நேதாஜி சாலை, ஜான்சிராணி பூங்கா, கான்சாமேட்டுத் தெரு, மறவர் சாவடி, விளக்குத்தூண் வழியாக விரகனூர் செல்லும்.

  மாட்டுத்தாவணியில் வரும் தடம் எண் 701 பஸ்கள் யானைக்கல், கீழமாசி வீதி,  காமராஜர் சாலை, கீழவாசல், தெற்குவாசல் வழியாக பெரியார் நிலையத்துக்கு இயக்கப்படுகிறது.

  கோயில்கள் இணைப்புத் திட்டம்:      மதுரை  அழகர்கோவில், மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில் ஆகியவற்றை இணைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் காவல் துணை ஆணையர் ஜெ.ராஜேந்திரன் கூறினார்.

  இதுகுறித்து மேலும் கூறியது: மதுரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் நலனுக்காக தற்போது இப்புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் மேற்கண்ட 3 கோயில்களில் ஒன்றுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து வேறு கோயிலுக்குச் செல்ல நினைத்தால் பஸ் நிலையம் சென்று பின்னர் வேறு பஸ்ûஸ பிடித்து கோயிலுக்குச் செல்லும் நிலை உள்ளது.

   இதைத் தவிர்க்கும் வகையில், அழகர்கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில் ஆகியவற்றை ஒரே நேர்கோட்டில் இணைக்கும் வகையில், இந்த 3 இடங்களுக்கும் செல்லும் வகையில் பஸ்களை இயக்குவது தொடர்பாக முன்மொழிவு உள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com