காந்தி நிகேதன் ஆசிரமத்தில் தொழில் பயிற்சிகள்

மதுரை, டிச.12:  மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமம், டாக்டர் ஜே.சி.குமரப்பா கிராமியத் தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனம் சார்பில் ஜனவரி 3-ம் தேதி முதல் குறுகிய கால பயிற்சிகள் நட

மதுரை, டிச.12:  மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமம், டாக்டர் ஜே.சி.குமரப்பா கிராமியத் தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனம் சார்பில் ஜனவரி 3-ம் தேதி முதல் குறுகிய கால பயிற்சிகள் நடைபெற உள்ளன.

  இதில், தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி, எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை பழுதுநீக்கும் பயிற்சி, ஸ்டீல் ஃபேப்ரிகேஷன் பயிற்சி, காலணி மற்றும் தோல் பொருள்கள் தயாரித்தல் பயிற்சி, ஃபேன்ஸி லெதர் மற்றும் ரெக்சின் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி உள்பட பல்வேறு குறுகியகால பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

    குறைந்தபட்சம் 10 மற்றும் 8-வது தேர்ச்சி பெற்று 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

  வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு இலவச தங்கும் விடுதி வசதி உண்டு. பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.    பயிற்சி விண்ணப்பம் மற்றும் விவரக் குறிப்பை நேரில் ரூ.25 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். தபாலில் பெற ரூ.35 மணியார்டர் அனுப்ப வேண்டும்.

   மேலும் விவரங்களுக்கு முதல்வர், டாக்டர் ஜே.சி.குமரப்பா கிராமியத் தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனம், காந்தி நிகேதன் ஆசிரமம், தே.கல்லுப்பட்டி- 625 702, மதுரை மாவட்டம், (தொலைபேசி 04549- 272365) என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

    இத்தகவலை டாக்டர் ஜே.சி.குமரப்பா கிராமியத் தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனத்தின் முதல்வர் ஆர்.வீமராஜ் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com