பச்சைகுமாச்சி மலை சாலை சீரமைக்கப்படுமா?

தேனி, ஜூலை 3:÷தேனி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ள பச்சை குமாச்சி மலைக்குச் செல்லும் ஹைவேவிஸ் சாலையை சீரமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோட்டத் தொழிலாள
Updated on
1 min read

தேனி, ஜூலை 3:÷தேனி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ள பச்சை குமாச்சி மலைக்குச் செல்லும் ஹைவேவிஸ் சாலையை சீரமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

÷சின்னமனூர் அருகில் இயற்கை எழில்கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது பச்சை குமாச்சி மலை.

இந்த மலையில் ஹைவேவிஸ், மேகமலை, மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, மகராஜாமெட்டு, இரவங்கலார் ஆகிய மலை கிராமங்கள் உள்ளன.

÷அருவிகள், அணைக்கட்டுகள், பச்சை பட்டு உடுத்தியதுபோல பரவிக் கிடக்கும் தேயிலைத் தோட்டங்கள், புல் வெளிகள், யானைக் கூட்டம் ஆகியவற்றை காண சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

÷சின்னமனூரில் இருந்து பச்சைகுமாச்சி மலைக்குச் செல்லும் 40 கி.மீ. தூரமுள்ள ஹைவேவிஸ் சாலை தனியார் எஸ்டேட் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. குண்டும் குழியுமாக உள்ள இச் சாலையில் பஸ்கள் முறையாக இயக்கப்படாததால், தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

÷இந்நிலையில், ஹைவிஸ் சாலையை தனியார் எஸ்ட்டேட் நிர்வாகம் சில ஆண்டுகளுக்கு முன் அரசிடம் ஒப்படைத்தது.

இதைத் தொடர்ந்து பச்சைகுமாச்சி மலை சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக சுற்றுலாத் துறையுடன் இணைந்து கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது.

÷ஆனால், நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இப்பகுதிக்கு ஜீப், கார் போன்ற தனியார் வாகனங்களில் மட்டுமே சென்று வர முடிவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

÷இந்நிலையில், இம் மாதம் கோடை விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை செய்து வருகிறது. ஹைவேவிஸ் சாலை மோசமான நிலையில் உள்ளதால் கோடை விழாவுக்குச் செல்ல பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

÷இதனால் கடந்த ஆண்டைபோல, அரசுத் துறை அதிகாரிகளும், அவர்கள் மூலம் அழைத்துச் செல்லப்படும் முக்கியஸ்தர்களும் மட்டுமே கோடை விழாவைக் காணக்கூடிய சூழ்நிலை உள்ளது.

÷பச்சைகுமாச்சி மலைச் சாலையை சீரமைத்து அதிகளவில் பஸ்களை நிரந்தரமாக இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com