மதுரை, நவ.18: பஸ் கட்டண உயர்வு குறித்து தமிழக முதல்வர் வியாழக்கிழமை அறிவித்தார். இந்த கட்டண உயர்வு ஒருசில தினங்களில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மதுரையில் வியாழக்கிழமை நள்ளிரவு முதலை பஸ் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. மதுரையிலிருந்து பிற பகுதிகளுக்கான பஸ் கட்டண (பழைய கட்டணம் அடைப்புக் குறிக்குள்) விவரம்:
புறநகர் பஸ்கள்:
மதுரை- கோவை: ரூ.111 (ரூ.70)
மதுரை- சேலம்: ரூ. 139 (ரூ.80)
மதுரை- ஈரோடு: ரூ.119 (ரூ.68)
மதுரை- பெரியகுளம்: ரூ.46 (ரூ.26)
மதுரை- திருப்பூர்: ரூ.102 (ரூ.58)
மதுரை- பொள்ளாச்சி: ரூ.100 (ரூ.58)
மதுரை- திருச்சி: ரூ.73 (ரூ.40)
மதுரை- நாகர்கோவில்: ரூ.140 (ரூ.80)
மதுரை- திருநெல்வேலி: ரூ.98 (ரூ.56)
மதுரை- ராமேசுவரம்: ரூ.98 (ரூ.50)
மதுரை- திருச்செந்தூர்: ரூ.109 (ரூ.65)
மதுரை- தூத்துக்குடி: ரூ.85 (ரூ.50)
மதுரை- சிவகாசி: ரூ.51 (ரூ.30).
மதுரை- செங்கோட்டை: ரூ.110 (ரூ.65)
மதுரை -சங்கரன்கோவில்: ரூ.76 (ரூ.45).
மதுரை- பாபநாசம்: ரூ.122 (ரூ.73)
பைபாஸ் ரெய்டர்:
மதுரை- திருச்சி : ரூ.78 (ரூ.45-ரூ.50)
மதுரை- திருநெல்வேலி: ரூ.105 (ரூ.70)
மதுரை- திருச்செந்தூர்: ரூ.114 (ரூ.73).
மதுரை- சென்னை:
சாதாரண பஸ்- ரூ.252 (ரூ.200)
ஏ.சி. பஸ்- ரூ.405 (ரூ.385)
அல்ட்ரா டீலக்ஸ்- ரூ.315 (ரூ.248)
நகரில் கட்டணம்:
நகரில் 40 கிலோ மீட்டருக்குள் சாதாரண பஸ்ஸில் குறைந்தபட்சம் ரூ.3 முதல் அதிகபட்சம் ரூ.12 வரையும், எல்.எஸ்.எஸ். பஸ்ஸில் குறைந்தபட்சம் ரூ.4 முதல் அதிகபட்சமாக ரூ.13 வரையும் கட்டணம் உயர்ந்துள்ளது.
அதேபோல், சிட்டி எக்ஸ்பிரஸ் பஸ்களில் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.18 வரையும், தாழ்தள சொகுசு பஸ்களில் குறைந்தபட்சம் ரூ.7 முதல் அதிகபட்சமாக ரூ.25 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
பெரியார் பஸ் நிலையத்திலிருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள கட்டண விவரம் (அடைப்புக் குறிக்குள் பழைய கட்டணம்):
மாட்டுத்தாவணி ரூ.9 (ரூ.7), திருமங்கலம்- ரூ.17 (ரூ.11), ஆரப்பாளையம்- ரூ.9 (ரூ.6), சோழவந்தான் - ரூ.21 (ரூ.13), மேலூர்- ரூ.21 (ரூ.13), அழகர்கோவில்- ரூ.19 (ரூ.12), காரியாபட்டி- ரூ.21 (ரூ.13), வாடிப்பட்டி- ரூ.21 (ரூ.13), சத்திரப்பட்டி- ரூ.15 (ரூ.10).
விருப்பம்போல் பயணக் கட்டணமும் உயர்வு: மதுரை மாநகரில் விருப்பம்போல் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நாள் ஒன்றுக்கு எடுக்கப்படும் ரூ.30 பயணச் சீட்டு, தற்போது ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று மதுரைப் போக்குவரத்துக் கழக வணிக மேலாளர் டி.எஸ்.வின்சென்ட் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.