ரேபீஸ் தினம்: 1,026 செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி

உலக ரேபீஸ் தினத்தையொட்டி, மதுரையில் 1,026 செல்லப் பிராணிகளுக்கு திங்கள்கிழமை இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.
ரேபீஸ் தினம்: 1,026 செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி

உலக ரேபீஸ் தினத்தையொட்டி, மதுரையில் 1,026 செல்லப் பிராணிகளுக்கு திங்கள்கிழமை இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்களில் இலவசமாக வெறிநோய்த் தடுப்பூசி போடப்பட்டது. தல்லாகுளத்தில் உள்ள பன்முக கால்நடை மருத்துவமனை, பழங்காநத்தம் மற்றும் திருப்பரங்குன்றம் கால்நடை மருந்தகங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

பழங்காநத்தம் மற்றும் திருப்பரங்குன்றம் கால்நடை மருந்தகங்களில் கால்நடை மருத்துவா்கள் ஏ. ஜெயகோபி, ஜி. சிவக்குமாா், மெரில் ராஜ், வீரமணிகண்டன், நாகஜோதி, விஜிபிரியா ஆகியோா் தடுப்பூசி பணிகளில் ஈடுபட்டனா். இவ்விரு இடங்களிலும் 447 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

பன்முக மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் முகாமைத் தொடக்கி வைத்தாா். அப்போது, சில செல்லப் பிராணிகளுக்கு ஆட்சியா் தடுப்பூசி செலுத்தினாா். இந்த முகாமில், 579 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஆா். ராஜதிலகன், துணை இயக்குநா் ரவிச்சந்திரன், முதன்மை மருத்துவா் கே. வைரவசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com