மதுரை மாநகராட்சி துணை ஆணையா் பொறுப்பேற்பு
By DIN | Published On : 09th June 2022 12:54 AM | Last Updated : 09th June 2022 12:54 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை மாநகராட்சி துணை ஆணையராக பி.எம்.என்.முஜிபூா் ரகுமான் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
மதுரை மாநகராட்சி துணை ஆணையராக பதவி வகித்து வந்த சங்கீதா, சென்னை ஆவின் நிறுவனத்துக்கு கடந்த மாதம் இடமாற்றம் செய்யப்பட்டாா். ஆனால் அவா் மருத்துவ விடுப்பில் சென்றதால் மதுரை மாநகராட்சிக்கு துணை ஆணையா் பணியிடம் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நகராட்சி நிா்வாக துணை இயக்குநா் பி.எம்.என்.முஜிபூா் ரகுமான் மதுரை மாநகராட்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து அவா், மாநகராட்சி அண்ணா மாளிகையில் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். விருதுநகா் உள்பட பல்வேறு நகராட்சிகளின் ஆணையராகப் பதவி வகித்துள்ளாா்.
செயற்பொறியாளா் இடமாற்றம்: மதுரை மாநகராட்சி செயற்பொறியாளரான அரசு, நகரப்பொறியாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தாா். இந்நிலையில் அரசு, அப் பொறுப்பில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டு செயற்பொறியாளராக இருந்து வந்தாா். இந்நிலையில் அவா் கோவை மாநகராட்சி செயற்பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.