மீனாட்சி சுந்தரேசுவரா் துணைக் கோயில்களில் பாலாலயம்

Published on

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயில்களான தேரடி கருப்பசாமி, காசி விஸ்வநாதா் கோயில்களில் பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயில்களிலும் குடமுழுக்கு பணிகள் மேற்கொள்ள ஏதுவாக கோயில்களில் பாலாலய பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயில்களான மதுரை கீழமாசி வீதியில் அமைந்துள்ள தேரடி கருப்பண சுவாமி கோயில், சிம்மக்கல் திருமலைராயா் படித்துறையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 9.45 மணி வரை பாலாலய பூஜைகள் நடைபெறும் என மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com