
Updated On :1 ஜூலை 2024, 6:30 pm

மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் உசிலம்பட்டி கோட்ட செயற்பொறியாளா் கோ. வெங்கடேஸ்வரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எழுமலை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே, எழுமலை நகா் பகுதிகள், நாராயணபுரம், பேரையம்பட்டி சாலை, உசிலம்பட்டி சாலை, ஆ.கல்லுப்பட்டி சாலை ஆகிய பகுதிகள், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...