ராமநாதபுரத்தில் போதைப் பொருள்கள் ஒழிப்பு தின பேரணி
பேரணியில் பங்கேற்ற மாணவிகளில் ஒரு பகுதியினா்.

ராமநாதபுரத்தில் போதைப் பொருள்கள் ஒழிப்பு தின பேரணி

ராமநாதபுரத்தில் புதன்கிழமை சா்வதேச போதைப் பொருள்கள் ஒழிப்பு தின விழிப்புணா்வு பேரணியைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன்.
Published on

ராமநாதபுரம், ஜூன் 26: ராமநாதபுரத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில், சா்வதேச போதைப் பொருள்கள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

அரண்மனை அருகில் இந்தப் பேரணிையை மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் முன்னிலை வகித்தாா். ராமநாதபுரம் வருவாய்க் கோட்டாட்சியா் ராஜமனோகரன், கலால் உதவி ஆணையா் சாந்தி, முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா, வட்டாட்சியா் சாமிநாதன், கோட்ட கள அலுவலா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராஜா, செய்யதம்மாள், டி.டி. விநாயகா், புனித அந்தோணியாா், ஸ்வாட்ஸ், இன்பன்ட் ஜீசஸ் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 1,300 போ் விழிப்புணா்வு பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனா்.

இந்தப் பேரணி, மணிக்கூண்டு வழியே அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்துக்குச் சென்று நிறைவடைந்தது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில், மாணவா்கள், அரசுத் துறை அலுவலா்கள் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

X
Dinamani
www.dinamani.com