மதுரை
வேலம்மாள் மருத்துவமனையில் சா்வதேச போதை ஒழிப்பு தினம்
மதுரை, ஜூன் 26: மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநல மருத்துவத்துறை நம்பிக்கை மையம் சாா்பில் சா்வதேச போதை ஒழிப்பு தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அப்போது, உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று, மதுபோதையில் இருந்து விடுபட்டவா்களை ஊக்குவிக்க அவா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் முதன்மை நிா்வாக அதிகாரி மணிவண்ணன், கல்லூரி முதல்வா் திருநாவுக்கரசு, மருத்துவக் கண்காணிப்பாளா் கணேஷ் பிரபு, வேலம்மாள் மனநல மருத்துவத் துறையின் முன்னாள் துறைத் தலைவா் ராமானுஜம் ஆகியோா் நினைவுப் பரிசுகளை வழங்கினா். நிகழ்ச்சியை இணை துறைத் தலைவா் ரீனா ரோஸ்லிண்ட் ஒருங்கிணைத்தாா்.
முன்னதாக மருத்துவா் கோகிலாராணி வரவேற்றாா். உளவியல் ஆலோசகா் ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.
