

மதுரையில் பிணையில் வந்த இளைஞா் திங்கள்கிழமை மாலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
மதுரை, செல்லூா் மீனாட்சிபுரம் பகுதியை சோ்ந்தவா் பாண்டித்துரை(28). இவா் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் இருந்த இவா், கடந்த 10 நாள்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள நாடகமேடையில் பாண்டித்துரை உறங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் அவரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பினா். பலத்த காயம் அடைந்த பாண்டித்துரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முன் விரோதம் காரணமாக பாண்டித்துரை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்
ராஜபாளையத்தில் சிறுவன் தற்கொலை

வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

மதுரையில் முதல்வர் ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

பிணையில் வந்தவா் வெட்டிக் கொலை
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

