அல் அமீன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

அல் அமீன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

Published on

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற மதி கண்காட்சியில் பங்கேற்ற அல் அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு, கேடயங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் மதி கண்காட்சி, உணவுத் திருவிழா நடைபெற்றது.

இதில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அல் அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்தினா்.

தமிழக ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் தமிழரசி, மாணவா்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்களை புதன்கிழமை வழங்கினாா்.

இந்தக் கண்காட்சிக்கு வருகை தந்த வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com