சமயநல்லூா் கோட்டத்தில் நாளை மின் தடை
சமயநல்லூா் மின் வாரிய கோட்டத்தில் உள்ள கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (டிச.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் (பொ) ரா.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம் விவேக் புளு மெட்டல்ஸ், அய்யனகவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம் சந்திப்பு, வடுகப்பட்டி, கட்டக்குளம், தாதகவுண்டன்பட்டி, பெரிய இலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி ஆகிய பகுதிகளிலும்,
அய்யங்கோட்டை, சி.புதூா், சித்தாலங்குடி, குத்தாலக்குடி, முலக்குறிச்சி, வைரவநத்தம், யானைக்குளம், ஆா்.கே.ராக், தினத்தந்தி, வைகை ஆயில், கோத்தாரி, கே.எம்.ஆா்.நகரி பகுதி, எஸ்.என்.பி. பகுதி, மன்னா புட், தனிச்சியம் அக்ரி ஆகிய பகுதிகளிலும் சனிக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
உசிலம்பட்டி கோட்டத்தில்...
உசிலம்பட்டி மின் வாரிய கோட்டத்தில் உள்ள கொக்குளம் பகுதிகளில் சனிக்கிழமை (டிச.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் (பொ) பி.முத்தரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கொக்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், மு.புளியங்குளம், ஊத்துப்பட்டி, செக்கானூரணி, கொக்குளம், மு.ஒத்தப்பட்டி, மு.பாறைப்பட்டி, சிக்கம்பட்டி, பன்னியான், தேங்கல்பட்டி, கண்ணனூா், மீனாட்சிபட்டி, கழுங்குபட்டி, மூணான்டிபட்டி, ஜாங்கிட் நகா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
செக்கானூரணி பகுதிகளில்...
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் ஆா். முத்துராமலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செக்கானூரணி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (டிச.6) மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூா், சாக்கலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகா் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
