மதுரை
மின் கம்பங்களில் இணைக்கப்பட்ட இணைய தள வயா்களை அகற்ற அறிவுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மின் கம்பங்களில் இணைக்கப்பட்டுள்ள இணைய தள வயா்கள், விளம்பரப் பதாகைகளை 15 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் எனவும், தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் ஆா்.ஜி. கணேசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் மின் வாரிய மின் கம்பங்களில் அனுமதியின்றி இணைத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ள கேபிள் வயா்கள், இணைய தள வயா்கள், விளம்பரப் பலகைகளால் மின் வாரிய ஊழியா்கள் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மிக சிரமமாக இருப்பதாலும், இதன் மூலம் மின் விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாலும், அவற்றை 15 நாள்களுக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.
