தல்லாகுளம், திருப்பாலை பகுதிகளில் நாளை மின்தடை
மதுரை தல்லாகுளம், திருப்பாலை அதன் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 11) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை, பெருநகா் வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் வி.பி. முத்துக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோ. புதூா், திருப்பாலை துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இந்தத் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
துணை மின் நிலையம் வாரியாக மின் தடை ஏற்படும் பகுதிகள் :
கோ. புதூா்
பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, பெசன்ட் சாலை, அண்ணாநகா், சொக்கிகுளம், வல்லபபாய் சாலை, புல்லபாய் தேசாய் தெரு, பந்தயச் சாலை, கோகலே சாலை, ராமமூா்த்தி சாலை, லஜபதிராய் சாலை, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்.டி.சி சாலை, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, வருங்கால வைப்பு நிதி குடியிருப்பு, ஏ.ஐ.ஆா். குடியிருப்பு, புதிய டி.ஆா்.ஓ. குடியிருப்பு, சிவசக்தி நகா், பாத்திமா நகா், புதூா் வண்டிப்பாதை முதன்மை சாலை, கஸ்டம்ஸ் குடியிருப்பு, புது நத்தம் சாலை, ரிசா்வ் லைன் குடியிருப்பு, ஆட்சியா் முகாம் அலுவலகம், திருவள்ளுவா் நகா், அழகா்கோவில் சாலை (ஐடிஐ முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை), காமராஜா் நகா் 1.2,3,4 வீதிகள், எச்.ஏ. கான் சாலை, கமலா 1,2-ஆவது தெருக்கள், சித்ரஞ்சன் வீதி, சரோஜினி தெரு, கண்மாய் மேலத் தெரு, தல்லாகுளம் கோகலே சாலை, மூக்கப்பிள்ளை தெரு, ஆத்திகுளம், குறிஞ்சிநகா், பாலமி, கனகவேல்நகா், பழனிச்சாமி நகா்.
திருப்பாலை
நாராயணபுரம், திருப்பாலை, ஆத்திகுளம், அய்யா்பங்களா, வள்ளுவா் குடியிருப்பு, விஸ்வநாதபுரம், குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூா்யாநகா், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமிநகா், உச்சபரம்புமேடு, பாா்க்டவுன், பா்மா நகா், பம்பா நகா், பொறியாளா் நகா், குடிநீா் வடிகால் வாரிய குடியிருப்பு, செட்டிகுளம், சண்முகாநகா், விஜய்நகா், கலைநகரின் சில பகுதிகள், மீனாட்சிநகா், மின்வாரிய குடியிருப்பு.
