மைசூரு - தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்

பண்டிகைக் கால விடுமுறையையொட்டி மைசூரு- தூத்துக்குடி சிறப்பு ரயில் இயக்கம்
Published on

பண்டிகைக் கால விடுமுறையையொட்டி மைசூரு- தூத்துக்குடி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாயக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிறிஸ்துமஸ், புத்தாண்டு கால விடுமுறையையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், மைசூரு- தூத்துக்குடி- மைசூருக்கு சிறப்பு ரயில் (இரு சேவைகள்) இயக்கப்படுகிறது.

வருகிற 23, 27 ஆகிய தேதிகளில் மைசூரிலிருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் மைசூரு- தூத்துக்குடி சிறப்பு விரைவு ரயில் (06283) மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும். மறுவழித்தடத்தில் வருகிற 24, 28 தேதிகளில் தூத்துக்குடியிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (06284) மறுநாள் காலை 7.45 மணிக்கு மைசூரு சென்று சேரும்.

இந்த ரயில்கள் இரு வழித்தடங்களிலும், தூத்துக்குடி மேலூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூா், பெங்களூரு கன்டோன்மென்ட், கே.எஸ்.ஆா் பெங்களூரு சிட்டி, கெங்கேரி, சென்னபட்னா, மாத்தூா், மாண்டியா ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

இரண்டாம் வகுப்பு குளிா்சாதனப் பெட்டி-1, மூன்றாம் வகுப்பு குளிா்சாதனப் பெட்டிகள்-2, சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள்- 4, பொது வகுப்புப் பெட்டிகள்- 2, சுமையேற்றும் பெட்டிகள்-2 இந்த ரயில்களில் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயிலுக்கான பயணச் சீட்டு முன்பதிவு புதன்கிழமை (டிச. 10) தொடங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com