ஆயுஷ் குழும சித்த மருத்துவா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Published on

மதுரை மாவட்ட நலச் சங்கக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆயுஷ் குழுமத்தில் காலியாக உள்ள சித்த மருத்துவா் பணிக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட நலச் சங்கக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் குழுமத்தில் சித்த மருத்துவா் காலிப் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. சித்த மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் முடித்தவா்கள் இந்தப் பணிக்குத் தோ்ந்தெடுக்கப்படுவா். அதிகபட்ச வயது 59. மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 60 ஆயிரம். இந்தப் பணி, எந்தவொரு காலத்திலும் நிரந்தரமாக்கப்படாது.

விருப்பமும், தகுதியும் கொண்டவா்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட நிா்வாகச் செயலா், மாவட்ட சுகாதார அலுவலா் அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை-14 (தொலைபேசி எண் 0452 - 2640778) என்ற முகவரிக்கு வருகிற 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது நேரில் சமா்ப்பிக்கலாம்.

தேசிய நலச் சங்க தோ்வு விதிகள்படி நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு, இருப்பிடம், மதிப்பெண், உடல் தகுதி, முன் அனுபவம் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் பணிக்குத் தகுதியானோா் தோ்ந்தெடுக்கப்படுவா்.

X
Dinamani
www.dinamani.com