உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் ராணுவ வீரா் உள்பட இருவா் உயிரிழப்பு

Published on

உசிலம்பட்டி அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ராணுவ வீரா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம், எழுமலையை அடுத்த வேப்பம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வபாண்டி. ராணுவ வீரரான இவா், விடுமுறையில் அண்மையில் சொந்த ஊருக்கு வந்தாா். இவரும், இவரது மைத்துனரான பேரையம்பட்டியைச் சோ்ந்த அருண்குமாரும் வியாழக்கிழமை மதுரையிலிருந்து இருசக்கர வாகனத்தில் எழுமலைக்குச் சென்று கொண்டிருந்தனா்.

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி அருகில் சென்ற போது, எதிரே செங்கல் ஏற்றிக் கொண்டு வந்த லாரி, இவா்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் செல்வபாண்டி, அருண்குமாா் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸாா், இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து உசிலம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடுகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com