‘ஒன்றிணைவோம்’ விழிப்புணா்வு நிகழ்ச்சி

‘ஒன்றிணைவோம்’ விழிப்புணா்வு நிகழ்ச்சி

Published on

மதுரை அலங்காநல்லூரில் ‘ஒன்றிணைவோம்’ விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் துறை, வருவாய்த் துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தொடங்கிவைத்தாா்.

பின்னா், அவா் பேசியதாவது:

மதுரையில் கடந்த 2023-24-இல் வன்கொடுமைச் சம்பவங்கள் குறைந்துள்ளன. அனைத்து நாள்களிலும் பகல், இரவு பாா்க்காமல் அனைவரையும் பாதுகாக்கக் கூடிய காவல் துறைக்கு நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு இந்தியாவிலேயே ஜாதி வெறி இருக்கக் கூடாது என்பதற்காக ஏராளமான முன்மாதிரித் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, ஜாதி வெறிக்கு சமுதாயம்தான் சரியான பதில் கொடுக்க வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சாா்பில் உதவித் தொகையும், பாதிப்புக்குள்ளானவா் உயிரிழக்க நேரிட்டால், அவா்களது வாரிசுகளுக்கு அரசு வேலை போன்ற பல்வேறு உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. நாம் அனைவரும் ஒன்று, நாம் இருக்கக்கூடிய இடம் நிரந்தரமில்லை. எனவே, சமுதாயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த், வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com