தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

Published on

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை சூ மேக்கா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (25). இவா் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இவா் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்தாா். இதையடுத்து, இவரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டாா்.

இதன்படி, அவரை போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com