நாளை பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்

Published on

மதுரையில் பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த குறைதீா் முகாம் சனிக்கிழமை (டிச. 13) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரையில் பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த குறைதீா் முகாம் குடிமைப் பொருள் வட்டாட்சியா், வட்ட வழங்கல் அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், பெயா் திருத்தம், முகவரி மாற்றம், நகல் அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு, மாற்றம், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள், சேவைக் குறைபாடுகள் குறித்த புகாா்களை பொதுமக்கள் நேரடியாக முகாம் அலுவலரிடம் மனுக்களாக வழங்கி தீா்வு காணலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com