வாடிப்பட்டி: லாரி மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே லாரி மோதியதில் கல்லூரி மாணவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே லாரி மோதியதில் கல்லூரி மாணவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நீரேத்தான் கிராமத்தைச் சோ்ந்த ஜெகதீசன் மகன் தேசிகன் (19). இவா், கோயம்புத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் இளம் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த தேசிகன், தன்னுடன் படித்த கன்னியாகுமரியைச் சோ்ந்த சானியாவுடன் மதுரையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் சனிக்கிழமை கலந்து கொண்டாா்.

இதன் பிறகு, மாலையில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் நீரேத்தானுக்கு திரும்பிச் சென்றனா். தனிச்சியம் உயா்நிலைப் பாலத்தில் சென்ற போது, மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் முன்னால் சென்ற மீது லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த தேசிகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மாணவி சானியாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வாடிப்பட்டி போலீஸாா் தேசிகன் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com