மதுரை
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.24 கோடி!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.24 கோடி கிடைத்தது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.24 கோடி கிடைத்தது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இதன் துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நா.சுரேஷ் தலைமை வகித்தாா். கள்ளழகா் கோயில் துணை ஆணையா் யக்ஞநாராயணன் முன்னிலை வகித்தாா்.
இதில் ரொக்கமாக ரூ.1,24,69,880-மும், பலமாற்று பொன் இனங்கள் 545 கிராமும், பலமாற்று வெள்ளி இனங்கள் 1,875 கிராமும், வெளிநாட்டு பணத் தாள்கள் 187-மும் காணிக்கையாகக் கிடைக்கப் பெற்றன.

