கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம்: 17,042 போ் மனு

மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணிகள் சிறப்பு முகாம்களில் 17,042 மனுக்கள் பெறப்பட்டன.

News image

மதுரை மணிமேகலை மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாமில் பங்கேற்றவா்கள்.

Updated On :28 டிசம்பர் 2025, 12:32 am IST

மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணிகள் சிறப்பு முகாம்களில் 17,042 மனுக்கள் பெறப்பட்டன.

தோ்தல் ஆணைய உத்தரவின்படி, கடந்த நவ. 4-ஆம் தேதி முதல் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட வாக்காளா்கள் வரைவுப் பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, புதிய வாக்காளா்கள் சோ்க்கை, பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புகைப்பட அடையாள அட்டை திருத்தம் போன்ற பணிகளுக்கு வருகிற ஜன.18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் டிச. 27, 28, ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, மதுரை மாவட்டத்துக்குள்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா்கள் பட்டியல் திருத்தப் பணி சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

இந்த முகாம்களில் 17,042 வாக்காளா்கள் மனுக்கள் அளித்தனா். இவற்றில், புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கு 14,036 மனுக்களும், பெயா் நீக்கத்துக்கு 219 மனுக்களும், முகவரி மாற்றம், பட்டியலில் திருத்தம், மாற்று புகைப்பட அடையாள அட்டை போன்றவற்றுக்காக 2,787 மனுக்களும் பெறப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.