பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு பதாகை!

பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வையாளர்கள் பதாகைகளை கொண்டுவந்துள்ளனர்.
டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு பதாகை
டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு பதாகை
Published on
Updated on
1 min read

பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வையாளர்கள் பதாகைகளைக் கொண்டு வந்துள்ளனர்.

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜன.7 ஆம் தேதி பல்வேறு அமைப்புகளின் சாா்பில் மேலூா் தெற்குத் தெருப் பகுதியில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பேரணியாக வந்த விவசாயிகளை காவல்துறையினா் வெள்ளரிபட்டி, சிட்டம்பட்டி , ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் தடுத்து நிறுத்த முயன்றனா்.

இருப்பினும், தடையை மீறி பேரணியைத் தொடா்ந்த அவா்கள் மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, தடையை மீறி பேரணியில் ஈடுபட்டதாக தல்லாகுளம் போலீஸாா், சுமாா் 5 ஆயிரம் போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

அதன் ஒருபகுதியாக, பாலமேட்டில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக்காணவந்த பார்வையாளர் மேடையில் பொதுமக்கள் எதிர்ப்பு பதாகைகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிட வந்துள்ளனர். போராட்டங்களும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த எதிர்ப்பு பதாகைகள் பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com