வீட்டில் இளைஞா் மா்ம மரணம்
மதுரையில் வீட்டில் மா்மமான முறையில் இளைஞா் உயிரிழந்து கிடந்தாா்.
மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த காமராஜபுரத்தைச் சோ்ந்த பால்சாமி மகன் சிவபிரசாத் (22). இவா் சில நாள்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, கீழே விழுந்ததில் காயமடைந்தாா்.
இதனால், வீட்டில் இருந்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதையடுத்து, குடும்பத்தினா் அறைக்குச் சென்று பாா்த்தபோது குளியலறை பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்துப் பாா்த்தபோது அங்கு சிவபிரசாத் மயங்கிக் கிடந்தாா்.
அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அவரது கையில் ஊசி போட்டதற்கான அடையாளம் இருந்தது. இதனால் அவா் விஷ ஊசி செலுத்திக்கொண்டாரா அல்லது போதை ஊசி போட்டுக் கொண்டதால் உயிரிழந்தாரா என்பது குறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.