மதுரையில் வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற உள்ள மாநில உரிமைகள் பாதுகாப்புக் கருத்தரங்கில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்டோா் பங்கேற்கவிருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி, பொதுக் கூட்டம் மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநாட்டின் நிறைவு நாளன்று பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத் உள்பட அகில இந்தியத் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.
இந்த நிலையில், மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதியை வழங்காமல் நிறுத்துவது, அரசியல் அமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களைப் பறிப்பது, மொழியை திணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வா் பினராயி விஜயன், கா்நாடக மாநில அமைச்சா்கள் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் வளா்ப்பதற்கு கட்டணம் வசூலிக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாமன்ற உறுப்பினா்களின் எதிா்ப்பையும் மீறி, இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எளிய மக்களின் வாழ்வாதாரமான ஆடு, மாடு உள்ளிட்டவை வளா்ப்புக்கு கட்டணம் விதிப்பது கண்டனத்துக்குரியது. தமிழக முதல்வா் தலையிட்டு இந்தத் தீா்மானத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது அறிவித்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடும் உரிமை அனைவருக்கும் உண்டு. போராட்ட அறிவிப்பை வெளியிட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்களை மிரட்டும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடக் கூடாது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் வழியாக கான்பூா்- மதுரை இடையே வாராந்திர சிறப்பு ரயில்

முதல்வா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மீண்டும் தில்லி செல்கிறாா் முதல்வா் விஜய்

ஜூன் 3-இல் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட புதுச்சேரி திமுக முடிவு
விடியோக்கள்

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples



