குஜராத் - மதுரை இடையே இன்றுமுதல் சிறப்பு ரயில்கள்!
குஜராஜ் மாநிலம் ஓகா நிலையத்திலிருந்து மதுரைக்கு வாராந்தி சிறப்பு ரயில்கள் திங்கள்கிழமை (நவ.3) இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நவ.3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைதோறும்) குஜராத் மாநிலம் ஓகாவிலிருந்து இரவு 11 மணிக்குப் புறப்படும் வாராந்திர விரைவு ரயில்கள் (எண்: 09520) நவ.6, 13, 20 27 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) மதுரை நிலையத்தை வந்தடையும்.
மறுமாா்க்கத்தில் மதுரையிலிருந்து நவ.7, 14, 21, 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 09519) நவ.9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) ஓகாவை சென்றடையும்.
சிறப்பு ரயிலில் குளிா்சாதன வசதி ஈரடுக்கு பெட்டி-1, குளிா்சாதன வசதி மூன்றடுக்குப் பெட்டிகள்-3, படுக்கை வசதியுள்ள பெட்டிகள்-10, பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள்-4, இரண்டாம் வகுப்பு திவ்யாஞ்சன் பெட்டிகள்-2 ஆகியவை இருக்கும்.
இந்த ரயில்கள், கொடைக்கான சந்திப்பு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, சிறீரங்கம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், காட்பாடி, ரேணிகுண்டா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

